search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    அசாமில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு- காங்கிரஸ் வாக்குறுதி

    அசாம் மாநில பெண்கள் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் அதிக திட்டங்களை அறிவிக்கும் என்றும் தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படும் என்றும் பிரியங்கா கூறினார்.
    கவுகாத்தி:

    தமிழ்நாட்டுடன் சேர்த்து அசாம் மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    அங்கு தற்போது ஆளுங்கட்சியாக பா.ஜனதா உள்ளது. அதை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி மெகா கூட்டணியை அமைத்துள்ளது.

    கடந்த தேர்தலில் பா.ஜ.க. அணியில் இருந்த பல கட்சிகளையும் இப்போது காங்கிரஸ் தன் பக்கம் இழுத்துள்ளது. இதனால் அசாம் மாநிலத்தில் போட்டி கடுமையாக மாறி இருக்கிறது.

    2 நாட்களுக்கு முன்பு பிரியங்கா அசாமில் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்தார். அப்போது மாநில பெண்கள் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் அதிக திட்டங்களை அறிவிக்கும். தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

    இந்தநிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவி சுஷ்மிதாதேவ் அசாமில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

    அவர் பேசும் போது, ‘‘பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது எங்களின் முதன்மையான திட்டமாகும். இதை கண்டிப்பாக நாங்கள் அமல்படுத்துவோம். காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள் ஆட்சியை பிடிப்பது உறுதி’’ என்று கூறினார்.
    Next Story
    ×