search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுதீர் முங்கண்டிவார்
    X
    சுதீர் முங்கண்டிவார்

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி வரும்: பாஜக தலைவர் பேச்சால் பரபரப்பு

    சபாநாயகர் தேர்தல் தேதி உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் அல்லது மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும் என்று பாஜக மூத்த தலைவர் சுதீர் முங்கண்டிவார் கூறினார்.
    மும்பை :

    மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக இருந்த நானா படோலே கடந்த மாதம் 4-ந் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் காங்கிரஸ் தலைவரானார். இந்தநிலையில் நேற்று காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கான தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியது.

    இது குறித்து பா.ஜனதா மூத்த எம்.எல்.ஏ. சுதீர் முங்கண்டிவாா் பேசியதாவது:-

    சட்டசபை சபாநாயகர் பதவி 30 நாட்களுக்கு மேலாக காலியாக இருப்பது, அரசியல் அமைப்பை கேலி கூத்தாக்கும். எனவே விரைவில் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி அதிகம் யோசிக்க வேண்டிய தேவையில்லை.

    இதற்கு முன் சபாநாயகர் பதவி 1 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே காலியாக இருந்து உள்ளது. அதிக நாட்களுக்கு சபாநாயகர் பதவியை காலியாக வைத்து கின்னஸ் சாதனை படைக்க போகிறீர்களா?. அரசு எந்திரம் சரியாக செயல்படவில்லை என கூறிதான் 1980, பிப்ரவரி 17-ல் இந்திரா காந்தி சரத்பவாரின் ஆட்சியை கலைத்தார். எனவே சபாநாயகர் தேர்தல் தேதி உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் அல்லது மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஆவேசமாக பதில் அளித்தார். அவர் பா.ஜனதாவையும், சுதீர் முங்கண்டிவாரையும் கடுமையாக விமர்சித்தார். அவர் ராமர் கோவில் கட்ட நன்கொடை கொடுக்காதவர்கள் மிரட்டப்படுவதாகவும், பா.ஜனதா ஏன் நன்கொடை வசூலிக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தேவேந்திர பட்னாவிஸ் ராமர் கோவில் நன்கொடை வசூலிக்கப்படுவது தொடர்பாக தனியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார். இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து துணை சபாநாயகர் நர்காரி ஜிர்வால் சட்டசபையை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார்.
    Next Story
    ×