search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது - இன்று வழங்கப்படுகிறது

    1983-ம் ஆண்டு டேனியல் எர்ஜின் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிகழ்வில், கடந்த 2016-ம் அண்டு முதல் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
    புதுடெல்லி:

    அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஆண்டுதோறும் எரிசக்தி மாநாடு (செராவீக்) நடத்தப்படுகிறது. கடந்த 1983-ம் ஆண்டு டேனியல் எர்ஜின் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிகழ்வில், கடந்த 2016-ம் அண்டு முதல் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான மேற்படி விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பெற்றுக்கொள்கிறார். மேலும் இந்த நிகழ்வில் அவர் காணொலி காட்சி மூலம் முக்கிய உரையும் ஆற்றுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

    உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலின் எதிர்காலம் குறித்த தலைமைத்துவத்தின் உறுதிப்பாடு, எரிசக்தி அணுகல், மலிவு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான தீர்வுகள் மற்றும் கொள்கைகளை வழங்குதலை இந்த விருது அங்கீகரிப்பதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×