search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிர்மலா சீதாராமன்
    X
    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிர்மலா சீதாராமன்

    டெல்லி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிர்மலா சீதாராமன்

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கி உள்ளது.

    கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக ஒரு கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி, முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும், நாள்பட்ட நோய்களுடன் போராடுகிற 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் 1-ந் தேதி தொடங்கி இருக்கிறது.

    தடுப்பூசியின் இரண்டாவது கட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

    இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மூத்த மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், டாக்டர் ஹர்சவர்தன், ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    3-வது நாளான நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரிக்கு தன்மகளுடன் சென்றார். அங்கு அவருக்கு நர்சு ஒருவர் கொரோனா தடுப்பூசியை செலுத்தினார்.

    இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனாவிற்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
    Next Story
    ×