search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரான்சுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    பிரான்ஸ் நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் உயிரி ஆற்றல் தொடர்பான தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக, இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

    பரஸ்பர நன்மை, சமத்துவம் மற்றும் பரஸ்பர பரிமாற்ற அடிப்படையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அடிப்படையை நிறுவுவதே இந்த ஒப்பந்தத்தின் அம்சம் ஆகும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் உயிரி ஆற்றல் தொடர்பான தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

    இதேபோல் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக, இந்தியாவிற்கும் பிஜிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 5 வருட காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
    Next Story
    ×