search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி
    X
    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

    மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

    ஐதராபாத்தில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
    ஐதராபாத்:

    நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர்.

    மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

    அவரைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித் ஷா, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், ஒடிஷா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டக் கொண்டனர்.

    இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.  

    Next Story
    ×