search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபைக்கு சைக்கிளில் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
    X
    சட்டசபைக்கு சைக்கிளில் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டசபைக்கு சைக்கிளில் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

    காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டசபைக்கு சைக்கிளில் பேரணியாக வந்தனர்.
    மும்பை:

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தொட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று மராட்டிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் காங்கிரஸ் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டசபைக்கு சைக்கிளில் பேரணியாக வந்தனர்.

    இதில் மாநில தலைவர் நானா படோலே, மந்திரிகள் பாலசாகிப் தோரட், வர்ஷா கெய்க்வாட், யசோமதி தாக்குர், அஸ்லாம் சேக், மும்பை தலைவர் பாய் ஜக்தாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சைக்கிள் பேரணி குறித்து நானா பட்டோலே கூறுகையில், " பெட்ரோல் விலை உயர்வு பொது மக்களின் வாழ்க்கையை கடினமாக்கி உள்ளது. மத்திய அரசு மக்களை சித்ரவதை செய்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயவுக்கு எதிராக சட்டசபைக்கு சைக்கிளில் வந்துள்ளோம் " என்றார்.

    இதேபோல சட்டசபை வளாகத்திலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×