search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடோலாந்து மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மொகிலாரி
    X
    போடோலாந்து மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மொகிலாரி

    நான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும்? -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்

    அசாம் அரசியலில் ஒரு காலத்தில் கிங் மேக்கராக இருந்த போடோலாந்து மக்கள் முன்னணி தலைவர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளார்.
    கவுகாத்தி:

    சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அசாம் மாநிலத்தில், ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்) வெளியேறி காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்தது. 

    அதன்பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிபிஎப் கட்சியின் தலைவர் ஹக்ரமா மொகிலாரி பேசுகையில், ‘நான் அவர்களின் (பாஜக) பக்கத்தில் இல்லாதபோது அவர்களால் எவ்வாறு வெற்றி பெற முடியும்? அசாமில் பாஜக வெளியேறுவதை நாம் காண வேண்டும்’ என்றார்.

    மொகிலாரியை வரவேற்று பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, அசாமின் தலைவிதி சிறப்பானதாக மாறப்போகிறது என்றும், பல துணை நதிகள் ஒன்றிணைந்து ஒரு மிகப்பெரிய நதியை உருவாக்குவதாகவும் கூறினார்.

    அசாமில் 2005ம் ஆண்டு உருவான பிபிஎப் கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின்னர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து ஆட்சியிலும் பங்கெடுத்தது. அதற்கு முன்பு நடந்த 3 தேர்தல்களிலும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. இந்த மூன்று தேர்தலிலும் பிபிஎப் கட்சி அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பிபிஎப் கட்சியின் தலைவர் ஹக்ரமா மொகிலாரி கிங்மேக்கராக இருந்தார். அதேபோல் இந்த முறையும் அவரது ஆதரவால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என ஆதரவாளர்கள் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர்.
    Next Story
    ×