search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    கிணறுகளுக்கு புத்துயிரூட்டும் திருவண்ணாமலை - ‘மன்கிபாத்’ உரையில் குறிப்பிட்ட மோடி

    பிரதமர் மோடி நேற்று வானொலி மூலம் ஆற்றிய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் திருவண்ணாமலையில் பொதுக்கிணறுகளுக்கு புத்துயிரூட்டுவது பற்றி குறிப்பிட்டார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நேற்று வானொலி மூலம் ஆற்றி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் திருவண்ணாமலையில் பொதுக்கிணறுகளுக்கு புத்துயிரூட்டுவது பற்றி குறிப்பிட்டார்.

    அப்போது அவர், “ஒரு காலத்தில் கிராமங்களில் மக்கள் கிணறுகளையும், குளங்களையும் கூட்டாக சேர்ந்து கவனிப்பது உண்டு. தற்போது அப்படி ஒரு முயற்சி, தமிழகத்தில் திருவண்ணாமலையில் நடந்து கொண்டிருக்கிறது. இங்கு மக்கள் தங்கள் கிணறுகளை பாதுகாப்பதற்கான காரியங்களை செய்து வருகின்றனர். இதே போன்று பல ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில், பொது கிணறுகளுக்கும் புத்துயிர் அளித்து வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

    மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவர் பற்றியும் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

    அவரைப்பற்றி கூறும்போது, “விவசாய கழிவுகளில் இருந்தும்கூட பணம் உருவாக்கும் பல சோதனை முயற்சிகள் ஒட்டுமொத்த நாட்டிலும் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில் மதுரையை சேர்ந்த முருகேசன் என்பவர், வாழையின் கழிவுகளில் இருந்து கயிறுகளை உருவாக்குவதற்கான எந்திரத்தை உருவாக்கி உள்ளார்.

    முருகேசனின் இந்த கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் மாசு பிரச்சினைகளையும் தீர்க்கும். அது மட்டுமின்றி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்துக்கும் வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டார்.
    Next Story
    ×