search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி- அறங்காவலர் குழு தலைவர் பேட்டி

    திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார்.

    திருப்பதி:

    திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதியில் கடந்த ஓராண்டாக கொரோனா நிபந்தனைகளால் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    வரும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் வழக்கம்போல் பக்தர்கள் அனைத்து சேவைகளுக்கும் நேரடியாக அனுமதிக்கப்படுவர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

    இதில் கண்டிப்பாக கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும். விரைவில் தேவஸ்தான ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

    கோவிலுக்கோர் கோமாதா திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    ஏழுமலையான் கோவிலை போன்றே இனி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் துலாபாரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மும்பை, ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும்.

    ஸ்ரீ வாரி பாதை வழியாக திருமலைக்கு நடந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ஸ்ரீ ராமர் அறக்கட்டளையினர் அனுமதி வழங்கினால், கோவில் அருகே திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமண மண்டபம் அல்லது பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×