search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி
    X
    திருப்பதி

    திருப்பதியில் 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.2,937 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2021-22-ம் ஆண்டுக்கான ரூ.2,937 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
    திருப்பதி:

    திருமலை, திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. அறங்காவலர் குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் பட்ஜெட் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி அறங்காவலர் குழுக் கூட்டத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    ரூ.2,937.28 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    உண்டியல் வருவாய் 2020-21-ம் ஆண்டில் ரூ.601 கோடி உண்டியல் வசூலானது. அதனால் 2021-22-ம் ஆண்டு ரூ.1,110 கோடி உண்டியல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரசாதங்கள் விற்பனை மூலம் ரூ.375 கோடி, முடி காணிக்கை செலுத்தும் ரசீதுகள் மூலம் ரூ.131 கோடி, கல்யாண மண்டபங்கள் வாடகை மூலம் ரூ.70 கோடி, வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மூலம் ரூ.210 கோடி, வங்கியில் செய்யப்பட்டுள்ள டெபாசிட்டுகள் மூலம் ரூ.533 கோடி வருவாய் கிடைக்கும் என்று தேவஸ்தானம் கணக்கிட்டுள்ளது.

    தேவஸ்தான ஊழியர்களுக்கான வசதிகள், பக்தர்களுக்கான வசதிகள், சாலைகள், குடிநீர் வசதி, கல்யாண மண்டபங்களை செப்பனிடுதல், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வேதபாட சாலைகள் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்து தர்ம பரி‌ஷத் பணிகளுக்காக ரூ.109 கோடி. இதர செலவுகளுக்காக ரூ.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இழந்த வருமானங்களை மீட்டெடுக்கும் வகையில் வரவு, செலவுகள் கணக்கிடப்பட்டுள்ளன.
    Next Story
    ×