search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழு அடைப்பு
    X
    முழு அடைப்பு

    கர்நாடகத்தில் மார்ச் 27-ந் தேதி முழு அடைப்பு: கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

    தமிழக அரசின் நதிகள் இணைப்பு திட்டத்தை கண்டித்து கர்நாடகத்தில் மார்ச் 27-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
    பெங்களூரு:

    தமிழ்நாட்டில் காவிரி, வைகை, குண்டாறு ஆகிய 3 நதிகளையும் இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டி இருந்தார். அதாவது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தென் மாவட்டங்களுக்கு திருப்பி விடும் விதமாக இந்த நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் காவிரி உபரி நீரை பயன்படுத்தி தொடங்கப்படும் இந்த திட்டத்திற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்த நதிகள் இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள நதிகள் இணைப்பு திட்டம் குறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள், பிற சங்கங்களின் தலைவர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு இருக்கும் நதிகள் இணைப்பு திட்டத்தை கண்டித்தும், அந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் மார்ச் 13-ந் தேதி கே.ஆர்.எஸ். அணையை நோக்கி பேரணி நடத்தவும், 27-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×