search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைதளங்கள்
    X
    சமூக வலைதளங்கள்

    50 லட்சம் பயனர்களை கொண்ட சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகள் பொருந்தும் - மத்திய அரசு

    50 லட்சம் பயனாளர்களை கொண்ட சமூக வலைதளங்களுக்கு புதிய விதிகள் பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    சமூக வலைதளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, 50 லட்சம் பேர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களுக்கு அவை பொருந்தும்' என குறிப்பிட்டுள்ளது

    வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு வகுத்துள்ளது.

    இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நாட்டில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் சமூக வலைதளங்களே இந்தக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என தெரிவித்துள்ளது.

    தற்போது நாட்டில் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு 53 கோடி பயனாளர்களும், பேஸ்புக்கில் 41 கோடி பயனாளர்களும் இன்ஸ்டகிராமில் 21 கோடி பயனாளர்களும் உள்ளனர். மேலும், டுவிட்டரை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 1.75 கோடியாகவும் உள்ளது.
    Next Story
    ×