
தலைமை தேர்தல் ஆணையத்தின் உதவி செயலர் பவன் திவான் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- அசாம், மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்தநிலையில் தேர்தல் பணியில் தொடர்புடைய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யவோ, பதவி உயர்த்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாமில் நேற்று 12 ஐ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த பணியிட மாற்றம் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.