search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.எல்.வி- சி51 ராக்கெட்
    X
    பி.எஸ்.எல்.வி- சி51 ராக்கெட்

    பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது

    19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1' உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. - சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது.

    இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இன்று 59வது ராக்கெட்டை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 10:24 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது.

    முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் மற்றும் அதில் பொருத்தப்பட்டுள்ள 19 செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் தீப்பிழம்பை கக்கியபடி செல்லும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    இஸ்ரோ முதன் முதலாக வணிக ரீதியில் பி.எஸ்.எல்.வி- சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×