search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வழிகாட்டு நெறிமுறை (கோப்புப்படம்)
    X
    கொரோனா வழிகாட்டு நெறிமுறை (கோப்புப்படம்)

    தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், மார்ச் 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் எந்தவித தளர்வுகள் இன்றி கடுமையான வகையில் பின்பற்றப்பட்டன.

    அதன்பின் பொருளாதார முன்னேற்றம், மக்கள் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஓரளவிற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு, மாதந்தோறும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ந்தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கெரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், கண்காணிப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலக்கை விரைவுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×