search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- தமிழகத்துக்கு சிறப்பு குழுவை அனுப்பியது மத்திய அரசு

    கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து தமிழகம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு மீண்டும் மத்திய உயர்மட்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் தற்போது இயல்பு நிலைகு திரும்பி வருகிறார்கள்.

    இந்தநிலையில் சில நாட்களாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்தது.

    இதையடுத்து அந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதையும் மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது.

    சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அந்த மாநிலங்களில் பரிசோதனைகளை தீவிரப்படுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி உள்ளது.

    மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு குழுவை அனுப்பி வைத்தது.

    அந்த மாநிலங்களில் மத்திய சிறப்பு குழுவின் ஆய்வு செய்து வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை செய்து வருகிறது. இதற்கிடையே மற்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு மீண்டும் மத்திய உயர்மட்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

    சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக பிற மாநிலங்களுக்கு சிறப்பு குழுவை ஆய்வுக்காக அனுப்பி உள்ளது. கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்களில் மாநில அரசுடன் சிறப்பு குழு இணைந்து செயல்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×