search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மராட்டியம், கேரளாவில் புதிய வகை கொரோனா - மத்திய அரசு தகவல்

    மராட்டியம், கேரளாவில் உருமாறிய 2 புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் மராட்டியம், கேரளா ஆகிய 2 மாநிலங்கள் கொரோனாவின் பிடியில் இன்னும் மீள முடியாமல் தத்தளிக்கின்றன. இந்த நிலையில் அங்கு என்440கே, இ484கே ஆகிய 2 உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் அவ்விரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு இந்த புதிய வகை கொரோனா வைரஸ்களே காரணம் என நம்புவதற்கில்லை என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.

    இதையொட்டி மத்திய அரசு சார்பில் நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் நேற்று கூறியதாவது:-

    புதிய வகை கொரோனா வைரஸ்களான என்440கே, இ484கே ஆகிய இரண்டும் மராட்டியத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இதே போன்று கேரளாவிலும், தெலுங்கானாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் வகை கொரோனா பாதிப்பும் இந்தியாவில் உள்ளது.

    அதே நேரத்தில் மாட்டியம், கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும், சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதற்கு இந்த புதிய வைரஸ்கள்தான் காரணம் என்று விஞ்ஞானபூர்வமாக நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை.

    வைரஸ் பிறழ்வுகள் தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3,500 திரிபுகள் மரபணு வரிசைபடுத்தப்பட்டுள்ளன. இப்படி மரபணுக்களை வரிசைபடுத்துகிறபோது, நாங்கள் வைரசின் தன்மையில் ஏதாவது வழக்கத்துக்கு மாறான மாற்றம் இருக்கிறதா என்று பார்க்கிறோம். பிறழ்வுகளை கவனித்துக்கொண்டும் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்
    Next Story
    ×