search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,584 பேருக்கு கொரோனா தொற்று, 78 பேர் உயிரிழப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,584 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,16,434 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 78 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,463 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,12,665 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 13,255 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.24 சதவீதமாகவும், உயிரிழப்பு விகிதம் 1.42 சதவீதமாகவும் உள்ளது.

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,47,306 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 1,17,45,552 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று 6,28,696 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
    Next Story
    ×