search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புகிறது - சாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்கிறது, மோடி அரசு : ராகுல்காந்தி

    மோடி அரசு, சாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்து, தனது நண்பர்களின் பாக்கெட்டை நிரப்புகிறது என்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி விட்டது.

    பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, அவற்றின் விலை குறைப்புக்கு வழி வகுக்குமாறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

    இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ‘பா.ஜனதாவின் எரிபொருள் கொள்ளை’ என்ற ஹேஷ்டேக்கில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உங்கள் காருக்கு பெட்ரோல் நிரப்புகையில், வேகமாக ஓடும் மீட்டரை பார்க்கும்போது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.

    கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. குறைந்து வருகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய். மோடி அரசு, சாமானியர்களின் பாக்கெட்டை காலி செய்து, தனது நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மாபெரும் பணியை செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×