search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மராட்டியத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

    மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று 6,281- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    மராட்டியத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் யவத்மாலில் 10 நாள் முழு ஊரடங்கும், அமராவதியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மராட்டியத்தில் இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. நேற்று முன்தினம் 5 ஆயிரத்தை தாண்டிய தொற்று பாதிப்பு நேற்று அது 6 ஆயிரத்தை கடந்தது. இதன் மூலம் கடந்த சில தினங்களாக ஆயிரம் ஆயிரமாக பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. 

    இந்த நிலையில், இன்று 6,281- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பிறகு மராட்டியத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகியுள்ளது. மும்பையில் மட்டும் 897- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 40- பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 753- ஆக உள்ளது. 
    Next Story
    ×