search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நிதி நிறுவன உரிமையாளருடன் வீட்டிற்குள் பூட்டி வைத்த அவமானத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

    திருவனந்தபுரம் அருகே நிதி நிறுவன உரிமையாளருடன் வீட்டிற்குள் பூட்டி வைத்த அவமானத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலை நரியூரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவரது மனைவி அக்‌ஷரா(வயது36). இவர் அந்த பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்குச் சென்று விட்டு வந்த அக்‌ஷரா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது துணிக் கடை அருகே நிதி நிறுவனம் நடத்தி வரும் ஒருவர், பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பேசுவதற்காக வந்துள்ளார். அவர்கள் இருவரும் வீட்டிற்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    இதனை அந்த பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, சுதீஷ், மணிகண்டன், ரஞ்சித் ஆகிய 4 பேரும் பார்த்தனர். அவர்களுக்கு அக்‌ஷரா மற்றும் நிதி நிறுவன உரிமையாளர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவருக்கும் தவறான தொடர்பு இருப்பதாக நினைத்த அவர்கள், வீட்டை வெளிப்பக்கமாக பூட்டினர்.

    பின்பு அது பற்றி அக்‌ஷராவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வர வைத்தனர். பின்பு வீட்டின் கதவை திறந்து நிதி நிறுவன உரிமையாளரை வெளியே வர செய்து தகராறில் ஈடுபட்டனர். பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக பேசியதை தவறாக நினைத்து தகராறு செய்ததால் அக்‌ஷரா மனவேதனை அடைந்தார்.

    தன்னை நிதி நிறுவன உரிமையாளருடன் வீட்டினுள் வைத்து அக்கம் பக்கத்தினர் பூட்டியதால் அவமானம் அடைந்த அக்‌ஷரா வீட்டிற்குள் ஓடிச் சென்று தனது கையை கத்தியால் வெட்டிக்கொண்டார். மேலும் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. உடல் கருகி உயிருக்கு போராடிய அக்‌ஷராவை அவரது உறவினர்கள் மீட்டு பாறசாலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அக்‌ஷரா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாலிபர்களின் தேவையில்லாத நடவடிக்கையால் அக்‌ஷரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இது குறித்து பாறசாலை போலீசார் விசாரணை நடத்தினர். சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவர்களை தவறாக பேசுவதாக நினைத்து வீட்டை பூட்டிய விஷ்ணு, சுதீஷ், மணிகண்டன், ரஞ்சித் ஆகிய 4 பேர் மீதும் அக்‌ஷராவை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×