search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம் மட்டுமே தீர்வு- உத்தவ் தாக்கரே

    கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முகக்கவசம் மட்டுமே பாதுகாப்பு ஆயுதம் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
    மும்பை:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில், மராட்டியத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை நோக்கி செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது மாநில மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, சத்ரபதி சிவாஜி காலத்தில் நடந்த போர்களில் வாள்களும் கேடயங்களும் பயன்படுத்தப்பட்டாலும், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முகக்கவசம் மட்டுமே பாதுகாப்பு ஆயுதம். கொரோனா  தொற்றுக்கு எதிராக நாம் போரிட்டு வருகிறோம். மக்கள் முகக்கவசத்தை தவிர்க்கக் கூடாது” என்றார். 

    முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாவிட்டால் மீண்டும் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்த நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். 
    Next Story
    ×