search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    இட ஒதுக்கீடு விஷயத்தில் அனைத்து சமூகங்களுக்கும் சட்டப்படி நீதி வழங்கப்படும்: எடியூரப்பா

    குருப சமூகமாக இருக்கட்டும், வால்மீகி சமூகமாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த சமூகமாக இருக்கட்டும், அனைத்து சமூகங்களுக்கும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நீதி வழங்கப்படும் என்று எடியூரப்பா கூறினார்.
    பெங்களூரு :

    முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    இட ஒதுக்கீடு அதிகரிக்குமாறு கோரி பல்வேறு சமூகங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. குருப சமூகமாக இருக்கட்டும், வால்மீகி சமூகமாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த சமூகமாக இருக்கட்டும், அனைத்து சமூகங்களுக்கும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நீதி வழங்கப்படும். இது எனது கடமை. அந்த கடமையை சரியாக ஆற்றுவேன்.

    எல்லா சமூகங்களுக்கும் நியாயப்படி என்ன கிடைக்க வேண்டுமோ அது நிச்சயம் கிடைக்கும். அது எப்போது கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அனைத்து அம்சங்களையும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இட ஒதுக்கீடு கேட்டு சமூகங்கள் போராடுவதை நான் குறை கூறவில்லை. போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. சட்ட ரீதியான முடிவுகளை எடுக்கும்போது, அதற்கு உரிய காலஅவகாசம் தேவைப்படுகிறது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

    ராமர் கோவில் கட்ட பொதுமக்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இந்த விஷயத்தை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தவறாக புரிந்து கொண்டுள்ளார். யாரும் பொதுமக்களை கட்டாயப்படுத்தி நன்கொடை வசூலிக்க முடியாது.

    குமாரசாமிக்கு விவரங்களை எடுத்துக் கூறுவோம். பொதுமக்களிடம் நன்கொடை வசூலிக்கப்படுவது வெளிப்படையாக நடக்கிறது.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
    Next Story
    ×