search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நளின்குமார் கட்டீல்
    X
    நளின்குமார் கட்டீல்

    20 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர ஆர்வம்: நளின்குமார் கட்டீல் பேட்டி

    காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவ்வாறு அதிருப்தியில் உள்ள 15 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர ஆர்வமாக உள்ளதாக நளின்குமார் கட்டீல் கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. ஆனால் குமாரசாமி அரசு மீதான அதிருப்தி காரணமாக 17 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதனால் கூட்டணி அரசு கவிழ்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. எடியூரப்பாவின் மந்திரிசபையில் மந்திரியாக உள்ள ரமேஷ் ஜார்கிகோளி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 மூத்த எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளில் சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவ்வாறு அதிருப்தியில் உள்ள 15 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் தற்போதைய நிலையில் அவர்கள் எங்கள் கட்சிக்கு தேவை இல்லை. சட்டசபையில் காலியாக உள்ள 3 தொகுதிகள் மற்றும் மக்களவையில் காலியாக உள்ள பெலகாவி தொகுதி ஆகியவற்றுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா வெற்றி பெறும்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட அறக்கட்டறை அமைக்கப்பட்டு, கோவில் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ராமர் கோவில் விஷயத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. பா.ஜனதாவுக்கு 12 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய-மாநில அரசுகள் கொரோனா பரவலை வெற்றிகரமான முறையில் கட்டுப்படுத்தியுள்ளன.

    தேசிய அளவில் 60 கோடி குடும்பங்களுக்கு உணவு பொருட்கள், 12 கோடி குடும்பங்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

    இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
    Next Story
    ×