search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சுநாத் பிரசாத்
    X
    மஞ்சுநாத் பிரசாத்

    இன்னும் 3 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மஞ்சுநாத் பிரசாத்

    பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்னும் 3 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு :

    பெங்களூருவில் நேற்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கேரள மாநிலத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்த நர்சிங் மாணவிகள் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த நர்சிங் கல்லூரியில் படிக்கும் 170 மாணவிகளும் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதுபோல, பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 500 பேர் வசிக்கின்றனர்.

    அவர்களில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. அந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. பெங்களூருவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தாலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு சற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா விதிமுறைகளை ஒவ்வொருவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    குறிப்பாக பெங்களூரு நகரவாசிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து மாநகராட்சியின் மார்ஷல்கள் அபராதம் வசூலிப்பார்கள். இன்னும் 3 மாதம் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இன்னும் 3 மாதம் மாநகராட்சியின் மார்ஷல்கள் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 34 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்த மாநகராட்சியிடம் போதிய வசதிகள் உள்ளன. பெங்களூருவில் 2-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் (அதாவது நேற்று) தொடங்கி உள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள் வருகிற 25-ந் தேதி வரை முதற்கட்ட தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×