search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா

    ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மக்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார்.
    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திருத்த மசோதா மீது மக்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்து உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:-

    பல எம்.பி.க்கள் இந்த மசோதாவைக் கொண்டுவருவதால் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று கூறி வருகின்றனர். நான் தான் மசோதாவை தயாரித்தேன், நான் கொண்டு வந்தேன். அதன் நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளேன்.

    ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்காது என்று மசோதாவில் எங்கும் எழுதப்படவில்லை. நீங்கள் எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்? நான் இந்த சபையில் கூறியுள்ளேன். இந்த மசோதாவிற்கும் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று மீண்டும் சொல்கிறேன். ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜம்மு-காஷ்மீர் பிரிவு ஐஏஎஸ், ஐபிஎல் மற்றும் ஐஎப்எஸ் போன்ற இந்திய சேவை அதிகாரிகளை அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம்  யூனியன் பிரதேச கேடருடன் இணைக்க இந்த மசோதா வகை செய்கிறது. விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×