search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்
    X
    சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்

    பஞ்சாப்பின் அமிர்தசரசில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்

    பஞ்சாப் அமிர்தசரஸில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
    சண்டிகர்:

    நாட்டின் வடமாநிலங்களான ஜம்மு, டெல்லி, பஞ்சாப்பில் அடுத்தடுத்து நேற்று இரவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    இதுபற்றி தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் நேற்றிரவு 10.34 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.

    ஜலந்தர் நகரிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அமிர்தசரஸ் அல்லது பஞ்சாபின் பிற பகுதிகளில் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என தெரிவித்தார்.

    இதேபோன்று, உத்தரகாண்ட் மாநிலம் மற்றும் நொய்டா நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×