search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவையில் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    மாநிலங்களவையில் பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    இவ்வளவு செய்தும் தவறான கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள்... எதிர்க்கட்சிகள் மீது நிதி மந்திரி தாக்கு

    எதிர்க்கட்சியில் உள்ள சிலருக்கு தொடர்ந்து குற்றம் சாட்டுவது ஒரு வகையான பழக்கமாகிவிட்டது என மாநிலங்களவையில் நிதி மந்திரி பேசினார்.
    புதுடெல்லி:

    பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாநிலங்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் வலுவான ஊக்கத்தை கொடுப்பதுடன், நீண்ட கால வளர்ச்சியை நோக்கியதாக உள்ளது. கொரோனா கால நிவாரணம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், 8 கோடி மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை மற்றும் உதவி தேவைப்படுவோர் என 40 கோடி மக்களுக்கு நேரடியாக பண உதவி வழங்கப்பட்டது. 

    நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்குவதையும் இந்த பட்ஜெட் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 1.67 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இது பணக்காரர்களுக்கான திட்டமா? கடந்த ஆண்டு அக்டோபர் 17 முதல் பிரதமரின் சவுபாக்யா யோஜனாவின் கீழ் 2.67 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்க மின் சந்தையில் வைக்கப்பட்டுள்ள ஆர்டர்களின் மொத்த மதிப்பு ரூ.8,22,077 கோடி. அவை பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றனவா? அவை குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன

    ஆகஸ்ட் 2016 முதல் ஜனவரி 2020 வரை யுபிஐ வழியாக 3.6 லட்சம் கோடிக்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யுபிஐ-ஐ யார் பயன்படுத்துகிறார்கள்? பணக்காரரா? இல்லை. நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் சிறு வணிகர்கள் இதை பயன்படுத்துகின்றனர். அப்போது இந்த மக்கள் யார்? அரசாங்கம் யுபிஐ உருவாக்கி, பணக்கார நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறதா? இல்லை.

    ஏழைகளுக்காக மத்திய அரசு வெளிப்படையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால், எதிர்க்கட்சியில் உள்ள சிலருக்கு தொடர்ந்து குற்றம் சாட்டுவது ஒரு வகையான பழக்கமாகிவிட்டது. ஏழைகளுக்காக நாங்கள் திட்டங்களை செயல்படுத்தியபோதிலும், இந்த அரசாங்கம்  பணக்காரர்களுக்காக மட்டுமே செயல்படுவதாக சொல்கின்றனர். தவறான கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×