search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    வேளாண் சட்டங்களின் நிறத்தைப் பற்றி விவாதிக்கிறார்கள்... காங்கிரஸ் எம்.பி.க்களை சாடிய பிரதமர்

    காங்கிரஸ் எம்பிக்கள் வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் குறித்து விவாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி பேசினார்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வேளாண் சட்டத்தில் உள்ள அனைத்து அம்சங்கள் தொடர்பாகவும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. டெல்லியில் போராடும் விவசாய சகோதரர்கள் வதந்திகளால் தவறாக வழி நடத்தப்படுகின்றனர்.

    மூன்று வேளாண் சட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வேளாண் சீர்திருத்தங்கள் முக்கியமானவை மற்றும் அவசியமானவை. வேளாண் சட்டங்கள் கருப்பு சட்டங்கள் என பெரும்பாலான தலைவர்கள் கூறுகிறார்கள். பாராளுமன்றத்தில்  காங்கிரஸ் எம்.பி.க்கள், சட்டங்களின் நிறம் (கருப்பு / வெள்ளை) குறித்து விவாதித்தனர். அதற்குப் பதிலாக அவர்கள் சட்டங்களின் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் குறித்து விவாதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    வேளாண் சட்டங்களை அமல்படுத்திய பின்னர் எந்த மண்டிகளும் மூடப்படவில்லை, குறைந்தபட்ச ஆதார விலையானது (எம்எஸ்பி) நாட்டில் எங்கும் பாதிக்கப்படவில்லை. இது நாம் மறைக்கும் உண்மை, அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் எம்எஸ்பி மீதான கொள்முதல் அதிகரித்தது. 

    வேளாண் சட்டங்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை முன்வைத்து போராடி வரும் விவசாயிகளை இந்த அவை, நமது அரசு மற்றும் நாம் அனைவரும் மதிக்கிறோம். அவர்களுடன் மூத்த மந்திரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அதுவே காரணம். விவசாயிகளுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    நாங்கள் கேட்காதபோது ஏன் சட்டம் கொண்டு வந்தீர்கள் என்ற வாதம் வந்துவிட்டது. இதை ஏற்றுக்கொள்வது அல்லது மறுப்பது உங்களைப் பொறுத்தது. இது கட்டாயமில்லை. வரதட்சணைக்கு எதிராக யாரும் சட்டம் கேட்கவில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்காக சட்டம் உருவாக்கப்பட்டது. முத்தலாக் மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்களும் உருவாக்கப்பட்டன.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×