search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாதுதீன் ஒவைசி
    X
    அசாதுதீன் ஒவைசி

    சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது, ஆனாலும் சீனாவின் பெயரை உச்சரிக்க மறுக்கிறார் பிரதமர் - ஒவைசி

    சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது; ஆனால் சீனாவின் பெயரைக்கூட உச்சரிக்க மறுக்கிறார் பிரதமர் மோடி என்று மக்களவையில் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பாக மத்திய அரசை சாடினார். மேலும், டெல்லியின் எல்லையில் போராட்டம் நடத்துபவர்களை சீனப் படைகளைப் போலவே நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார். 

    இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “சிக்கிமில் சீன ராணுவம் நுழைகிறது; ஆனால் சீனாவின் பெயரைக்கூட உச்சரிக்க பிரதமர் மோடி மறுக்கிறார். இந்தியா-சீனா எல்லையில் சீனா எங்கள் 20 ஜவான்களைக் கொன்றது. அவர்களின் தியாகத்தை மத்திய அரசாங்கம் மறந்துவிட்டது. பிபி 4-பிபி 8 இல் இந்தியா இன்னும் ரோந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் எல்.ஏ.சி அருகே சீனா ஒரு கிராமத்தை அமைத்தது. சீன ராணுவத்தின் இந்த செயலை, சீனாவிடம் சொல்ல அரசாங்கத்திற்கு தைரியம் இல்லை

    நாங்கள் திக்ரி, சிங்கு மற்றும் காசிப்பூரில் உள்கட்டமைப்பை அமைத்துள்ளோம். அருணாச்சல பிரதேசத்தில் அல்ல. விவசாயிகள் எந்த வகையான நடத்தைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அவர்கள் சீனப் படைகள் போல தோற்றம் அளிக்கிறார்களா? நீங்கள் வேளாண் சட்டங்களை ரத்துசெய்து உங்கள் ஈகோவை விட்டுவிடுங்கள்” என்று தெரிவித்தார்.
    Next Story
    ×