search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்
    X
    சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண்

    இதுவரை 63.10 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி -மத்திய சுகாதாரத்துறை தகவல்

    மொத்த கொரோனா பாதிப்பில் 71% பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி பணிகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * இந்தியாவில் இதுவரை 63.10 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    * தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணி பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கும்

    * மொத்த கொரோனா பாதிப்பில் 71% பேர் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்தவர்கள்

    * பாதிப்படைந்தவர்களில் 3.12% பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர் 

    * கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 10 லட்சம் மக்களில் 112 பேர் என்ற அளவில் உள்ளது.

    * 15 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இறப்புகூட பதிவாகவில்லை 

    * 7 மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களாக ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை

    * 33 மாநிலங்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×