search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளம்
    X
    பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளம்

    உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு அமெரிக்கா, பிரான்ஸ் இரங்கல்

    உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நேபாளம் நாட்டின் வெளியுறவுத்துறை இரங்கல் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகேயுள்ள தவுளிகங்கா ஆற்றில் கலந்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்மட்டம் அதிகரித்தது.

    உத்தரகாண்டின் தபோவன் பகுதியில் ரெய்னி கிராமத்தில் தேசிய அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.  இதனருகே ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால் தொழிலாளர்கள் பலர் வெள்ள நீரில் சிக்கி கொண்டனர்.  ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்கக் கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் தெரிவித்துள்ளார். இதுவரை 9 உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நேபாளம் நாட்டின் வெளியுறவுத்துறை இரங்கல் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தோம். உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். மாயமானவர்களை விரைந்து மீட்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
    Next Story
    ×