search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜ்நாத் சிங்
    X
    ராஜ்நாத் சிங்

    கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு - ராஜ்நாத் சிங்

    கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி 9 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகாவின் பெங்களூருவில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மந்தன் 2021 நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று 384 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

    பாதுகாப்பு உற்பத்தித் துறையில் புதிதாக நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கூடுதலான ஊக்குவிப்பு தேவையென்பதை உணர்ந்து அரசு செயல்படுகிறது.

    ஏரோ இந்தியா கண்காட்சியில் 45 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 203 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளன.

    கடந்த 2015-2020 ஆகிய 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

    நம்முடைய உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி வரும் 2025-ம் ஆண்டுக்குள் 2,500 கோடி அமெரிக்க டாலராகவும், அவற்றின் ஏற்றுமதி 500 கோடி அமெரிக்க டாலராகவும் இலக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றை நாம் அடைந்துவிட்டால் ஏவுகணை, ராணுவ விமானம், வர்த்தக விமானம் உள்ளிட்ட வான்வெளி துறை முக்கிய பங்கு வகிக்கும்.

    ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் நம்முடைய பொருளாதாரம் மேம்பாடு அடையப் போகிறது. இந்தியாவின் சுயாட்சி தன்மையை பராமரிப்பதில் பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தியில் தற்சார்புடன் திகழ்வது முக்கிய காரணியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×