search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்
    X
    உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்

    மகாராஷ்டிரா உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்குக்கு கொரோனா தொற்று உறுதி

    மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா தொற்றால் மத்திய மந்திரிகள், மாநில முதல் மந்திரிகள், மந்திரிகள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

    இதுதொடர்பாக, அனில் தேஷ்முக் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். இன்று எனது கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். இருப்பினும், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×