என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 மில்லியன் தடுப்பூசிகள்: குறைந்த நாட்களில் செலுத்திய நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
Byமாலை மலர்5 Feb 2021 2:18 PM GMT (Updated: 5 Feb 2021 2:18 PM GMT)
இந்தியாவில் 21 நாட்களில் 52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, சாதனைப் படைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், அதன்பின் முன்களப் பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சற்று தயக்கம் இருந்தது. அதன்பின் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இன்றுடன் 21-வது நாட்களில் ஒட்டுமொத்தமாக 50 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 3,31,029 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை கடந்த 21 நாட்களில் 1,04,781 முகாம் மூலம் 52,90,474 பேருக்கு செலுத்தப்பட்டது.
இதன்மூலம் குறைந்த நாட்களில் 50 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
அமெரிக்காவில் 24 நாட்களில் 50 லட்சம் பேருக்கும், இங்கிலந்தில் 43 நாட்களிலும், இஸ்ரேலில் 45 நாட்களிலும் செலுத்தப்பட்டது என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
×