search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்ஷ் வர்தன்
    X
    ஹர்ஷ் வர்தன்

    தடுப்பூசி வழங்க 22 நாடுகள் கோரிக்கை: இதுவரை 1.60 கோடி டோஸ்கள் வழங்கியுள்ளோம்- மத்திய அரசு

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு இந்தியாவுக்கு 22 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்- அஸ்ட்ராஜெனேகாவுடன் இணைந்து கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது. பாரத் பயோடெக் கோவேக்சின் தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது.

    இந்த இரண்டு மருந்துகளும் இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் பயன்பாட்டிற்று வந்து சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளது. ஒப்பந்தம் பேரிலும் வழங்கியுள்ளதுது.

    இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மக்களவையில் கூறுகையில் ‘‘இதுவரை 22 நாடுகள் தடுப்பூசி கேட்டுள்ளது. ஏற்கனவே 15 நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் உதவியாகவும், ஒப்பந்தம் அடிப்படையிலும் வழங்கப்பட்டுள்ளது. 56 லட்சம் டோஸ்கள் இலவசமாக அளித்துள்ளோம். 1.05 கோடி டோஸ்கள் ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
    Next Story
    ×