search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை
    X
    மாநிலங்களவை

    ஜம்மு காஷ்மீரில் ஒருவர்கூட வீட்டுக்காவலில் இல்லை- மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் தகவல்

    ஜம்மு காஷ்மீரில் ஒருவர்கூட வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் பொதுபாதுகாப்பு சட்டத்தின்கீழ் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை அமைச்சகம் சார்பில் எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்யப்பட்டது. 

    அதில், ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள், கல்வீசி தாக்குதல் நடத்தியவர்கள், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் என 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் இதுவரை 430 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர்கூட வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் குலாம் நபி பேசியபோது, ஜம்மு காஷ்மீருக்கான மாநில நிலையை மீட்டெடுக்க  வேண்டும், அங்கு சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    Next Story
    ×