search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்தீப் சிங் புரி
    X
    ஹர்தீப் சிங் புரி

    தஞ்சை, வேலூர், நெய்வேலி, ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு- மத்திய மந்திரி தகவல்

    தமிழ்நாட்டில் தஞ்சை, வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து மந்தரி ஹர் தீப்சிங்புரி தகவல் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மேல்-சபையில் இன்று நடந்த விவாதத்தின்போது தி.மு.க. எம்.பி. வில்சன் தமிழகத்தில் விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு மத்திய விமான போக்குவரத்து மந்தரி ஹர்தீப் சிங் புரி அளித்த பதில் வருமாறு:-

    தமிழ்நாட்டில் தஞ்சை, வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    சேலம் விமான நிலை யத்தை விரிவாக்கம் செய்வதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும்.

    தமிழகத்தில் புதிய விமான நிலையங்கள் அமைத்தல் மற்றும் விரிவாக்கத்துக்காக 195 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சை விமான நிலையம் அமைக்க ரூ.50 கோடியும், வேலூர் விமான நிலையத்தக்கு ரூ.44 கோடியும், ராமநாதபுரத்துக்கு ரூ.36 கோடியும், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறிய விமான நிலையங்களை சீரமைத்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மத்திய மந்திரி கூறினார்.

    Next Story
    ×