search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கேரள லாட்டரியில் ரூ.80 லட்சம் பரிசு பெற்ற பீகார் தொழிலாளி - பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

    கேரள மாநிலத்தில் காருண்யா லாட்டரியில் ரூ.80 லட்சம் பரிசு பெற்ற பீகார் தொழிலாளி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் காருண்யா லாட்டரிச்சீட்டு குலுக்கல் நடந்தது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது சையத் என்ற வாலிபருக்கு ரூ.80 லட்சம் பரிசு கிடைத்தது.

    இவர் கடந்த 12 ஆண்டுகளாக கேரளாவில் கொல்லம் பகுதியில் உள்ள நந்தி லைட்ஹவுஸ் பகுதியில் வசிக்கிறார். அங்கு தனியார் சிமெண்ட் ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கொல்லம் பகுதியில் ஒரு கடையில் 22 லாட்டரிச்சீட்டுகளை வாங்கினார். இதில் ஒரு லாட்டரிச்சீட்டிற்கு ரூ.80 லட்சம் பரிசு கிடைத்தது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் மகிழ்ச்சியில் மூழ்கினார். பின்னர் அந்த வாலிபர் லாட்டரிச்சீட்டில் பரிசு கிடைத்துள்ளதால் மற்றவர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என கருதினார்.

    இதனால் அவர் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு லாட்டரிச்சீட்டுடன் அருகில் உள்ள கொயிலண்டி போலீஸ் நிலையம் சென்றார். அங்கு போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.

    மறுநாள் நேற்று (திங்கட்கிழமை) போலீசார் அவரை அருகில் உள்ள வங்கிக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். லாட்டரிச்சீட்டில் பரிசு கிடைத்தது குறித்து தொழிலாளி முகமது சையத் கூறும்போது, இந்த பணத்தை தன் குடும்பத்தினரின் எதிர்காலத்திற்காக பயன்படுத்திக்கொள்வதாக கூறினார். 


    Next Story
    ×