search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேலும் ஒரு தடுப்பூசி பரிசோதனைக்கு சீரம் நிறுவனம் அனுமதி கேட்கிறது

    சீரம் நிறுவனம் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மற்றொரு தடுப்பூசி தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிப்பதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமான சீரம், ஏற்கனவே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை சீரம் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளது. இதைப்போல பல்வேறு அண்டை நாடுகளுக்கு நன்கொடையாகவும், பிரேசில், மொரோக்கோ போன்ற வெளிநாடுகளுக்கு வர்த்தக ரீதியிலும் இந்த தடுப்பூசி அனுப்பப்பட்டு வருகிறது.

    சீரம் நிறுவனம் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மற்றொரு தடுப்பூசி தயாரித்து உள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிப்பதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

    இதுகுறித்து சீரம் நிறுவன தலைவர் பூனவல்லா தனது டுவிட்டர் தளத்தில், ‘நோவாவேக்சுடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி சிறந்த செயல்திறன் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அனுமதி கேட்டுள்ளோம். வருகிற ஜூன் மாதம் இந்த தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்’ என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×