என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  பெங்களூரு:

  கர்நாடகத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

  தடுப்பூசி போட்டதற்கு பின் அவர்களில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த டாக்டர்களில் 2 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 3 பேர் கோவேக்சின் தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்கள் ஆவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 5 டாக்டர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததன் காரணமாக அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
  Next Story
  ×