search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை உயர்நீதிமன்றம்
    X
    மும்பை உயர்நீதிமன்றம்

    சர்ச்சை தீர்ப்புகளை வழங்கிய நாக்பூர் கிளை நீதிபதியை நிரந்தர நீதிபதியாக்க மறுப்பு என தகவல்

    மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக கொலிஜியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாலியல் தொடர்பான வழக்குகளில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்புகள் வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற  நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக கொலிஜியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்கக் கோரிய பரிந்துரை வாபஸ் பெறப்பட்டுள்ளது.  பெண்களை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தொல்லை இல்லை என கருத்து தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்ற கொலிஜியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    நிரந்தர நீதிபதிகள் நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பும். இதன் அடிப்படையில், மத்திய அரசு ஒப்புதல் வழங்கும்.  சில சமயங்களில் இதுபோன்று பரிந்துரைகளை கொலிஜியம் கூடுதல் விவரங்களுக்காக திரும்பப்பெற முடியும்.
    Next Story
    ×