search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    சசிகலா உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

    சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை சுப்ரீம் கோர்ட்டால் விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறை தண்டனை காலம் நிறைவடைந்ததை அடுத்து சசிகலா கடந்த 27-ந் தேதி பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவனையில் இருந்தபடியே விடுதலை செய்யப்பட்டார். ஆயினும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தது. இதனால் அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு சர்க்கரை பிரச்சினையும் கட்டுக்குள் வராமல் இருந்தது. இந்த நிலையில் அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற அனைத்து பிரச்சினைகளும் கட்டுக்குள் வந்துள்ளன.

    சசிகலாவின் உடல்நிலை இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளதாக நேற்று  விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.
    இந்த நிலையில், சசிகலா உடல்நிலை குறித்து இன்று விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * சசிகலாவின் உடல் நிலை சீராக உள்ளது. அவரது உடல் நிலை  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    * ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக உள்ளது.

    * செயற்கை சுவாசம் இன்றி சசிகலா சுவாசிக்கிறார். கொரோனா அறிகுறி இல்லாத நிலை தொடர்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×