search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நரேஷ் திகைட், ராகேஷ் திகைட்
    X
    நரேஷ் திகைட், ராகேஷ் திகைட்

    காசிபூர் எல்லை போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வருமா?: பாரதிய கிஷான் யூனியனில் முரண்பட்ட கருத்து

    காசிபூர் எல்லையில் இன்றுடன் போராட்டம் முடிவுக்கு வருகிறது என்று பாரதிய கிஷான் யூனியன் சங்க தலைவர் தெரிவித்துள்ள நிலையில், செய்தி தொடர்பாளர் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
    டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக வன்முறை ஏற்பட்டது. செங்கோட்டைக்குள் நுழைந்து கோபுரத்தில் விவசாய சங்க கொடிகளை ஏற்றினர்.

    இதனால் மத்திய அரசு அதிருப்தியடைந்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி மாநில எல்லையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி- உத்தர பிரதேச மாநில எல்லையான காசிபூரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, சாலைகளை காலி செய்ய செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவதை உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தர பிரதேச அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் நரேஷ் திகைட் ‘‘இன்றுடன் எல்லையில் நடைபெறும் போராட்டம் முடிவுக்கு வரும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் அவரது சகோதரரும், பாரதிய கிஷான் யூனியனின் செய்தி தொடர்பாளருமான ராகேஷ் திகைட் ‘‘நாங்கள் எங்களுடைய தர்ணா போராட்டத்தை நடத்துவோம். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை இந்த இடத்தை காலி செய்யமாட்டோம். தண்ணீர், மின்சார வினியோகம் போன்ற அடிப்படை வசதிகளை நிர்வாகிகள் தடை செய்துள்ளனர். நாங்கள் எங்களுடைய கிராமத்தில் இருந்த தண்ணீர் கொண்டு வருவோம்’’ என்றார்.

    இதனால் பாரதிய கிஷான் யூனியன் போராட்டத்தை கைவிடும் முடிவில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×