search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா அமெரிக்க கொடிகள்
    X
    இந்தியா அமெரிக்க கொடிகள்

    இந்தியா - அமெரிக்கா உயர்மட்ட பேச்சுவார்த்தை: பைடனின் நிலைப்பாட்டை உறுதி செய்த பாதுகாப்பு ஆலோசகர்

    அமெரிக்கா - இந்தியா கூட்டமைப்புக்கான அதிபர் ஜோ பைடனின் நிலைப்பாட்டை அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா, இந்தியா இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி ஆஸ்டின், இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். 

    இந்த பேச்சுவார்த்தையின்போது பன்முக பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டமைப்பு யுக்தியை மேலும் வலுப்படுத்த, ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

    அதன்பின்னர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்கா பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்வார்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

    பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, கொரோனா மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வது தொடர்பாக பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, அமெரிக்கா-இந்தியா கூட்டமைப்புக்கான அதிபர் ஜோ பைடனின் நிலைப்பாட்டை அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் உறுதிப்படுத்தி உள்ளார்.
    Next Story
    ×