search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமால் உதின் அகமது
    X
    பதர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமால் உதின் அகமது

    அசாமில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்

    அசாம் மாநில பதர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமால் உதின் அகமது உடல்நலக்குறைவால் காலமானார்.
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் உள்ள பதர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமால் உதின் அகமது. இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் அவரது உடல் நலம் மோசமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக கரிம்காஞ்ச் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    அங்கு நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஜமால் உதின் அகமது மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. ஜமால் உதின் அகமதுவுக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
    Next Story
    ×