என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  திருவனந்தபுரம் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவனந்தபுரம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்த புரத்தை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காரில் கொல்லம் அருகே சிரக்கரா பகுதியை சேர்ந்த 5 பேர் இருந்தனர்.

  இந்த கார் நேற்று இரவு 11 மணி அளவில் திருவனந்தபுரம் கல்லம்பலம் தொட்டகாட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லத்துக்கு சென்ற மீன் லாரி, மீது மோதியது. இதில் கார் நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

  இதில் காரில் பயணம் செய்த விஷ்ணு, ராஜீவ், அருண் மற்றும் சுதீஷ் உள்பட 5 பேர் பலியாகினர். காரில் பயணம் செய்த மற்றொருவர் அடையாளம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி அதன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

  Next Story
  ×