என் மலர்
செய்திகள்

வாகன சோதனை
குடியரசு தின விழா: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு- போலீஸ் கடும் வாகன சோதனை
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் போலீசார் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் இன்று இரு பெரும்சவால்களுக்கு மத்தியில் நடக்கிறது. ஒன்று, கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல். மற்றொன்று, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வருகிற தொடர் போராட்டமும், டிராக்டர் பேரணியும்.
இதனால் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை போலீசார் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நார்த் அவன்யூ போன்ற இடங்களில் கார், இருசக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
Next Story