search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி பாராளுமன்றம்
    X
    டெல்லி பாராளுமன்றம்

    புதிய விலைப்பட்டியல் வெளியீடு : பாராளுமன்ற கேன்டீனில் கோழி பிரியாணி ரூ.100

    பாராளுமன்ற கேன்டீனில் விற்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியல் தற்போது வெளியிட்டு உள்ளது
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் உள்ள எம்.பி.க்களுக்கான கேன்டீனில் முன்பு மானிய விலையில் உணவுகள் வழங்கப்பட்டன. இது பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தநிலையில் உணவுகளுக்கு மானியம் வேண்டாம் என்று எம்.பி.க்கள் ஏகமனதாக முடிவு எடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து மானியம் கிடையாது என்று சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். மேலும் கேன்டீனை நடத்தும் பொறுப்பு இந்திய சுற்றுலா மேம்பாட்டுக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    வர இருக்கிற பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து கேன்டீனில் விற்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியல் தற்போது வெளியிட்டு உள்ளது.

    இதன்படி இனிமேல் கோழி பிரியாணி ரூ.100-க்கும், ஆட்டிறைச்சி பிரியாணி ரூ.150-க்கும் விற்கப்படும். அதைப்போல கோழிக்கறி (2 துண்டு) ரூ.75, ஆட்டிறைச்சி கறி (2 துண்டு) ரூ.125, சப்பாத்தி-ரூ.10, உருளைக்கிழங்கு போண்டா-ரூ.10, மதிய சாப்பாடு அசைவம்-ரூ.700, சைவச்சாப்பாடு -ரூ.500, சாதாரண சைவ சாப்பாடு-ரூ.100, முட்டைக்கறி (2)-ரூ.30, ஆம்லெட்-ரூ.20, எலுமிச்சை சாதம்-ரூ.30, பொங்கல்-ரூ.50 என்ற விலையிலும் விற்கப்பட உள்ளது. மொத்தம் 58 உணவு வகைகளின் விலை விவரம் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.

    இந்த புதிய விலை, சில உணவு வகைகளுக்கு இதற்கு முன்பு இருந்த விலையைவிட 3 முதல் 4 மடங்கு அதிகம் ஆகும்.
    Next Story
    ×